சிரிக்க சிந்திக்க இரண்டு நிமிடங்கள்

 

நன்றி : ஓவியர் மு. முகிலன், செம்பருத்தி ஏப்ரல் 2006

 

அன்பான மலேசியத் தமிழ் பூமிபுத்திராக்களே!


ஆம், நாம் இனிமேல் நம்மை பூமிபுத்திராக்கள் என்றுதான் கூறிக்கொள்ள வேண்டும்; சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும

.
தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தன்னை ஒரு பூமிபுத்திரன் என்று அறிவித்து விட்டார். வரப்போகின்ற மஇகா மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் மஇகா பிரதிநிதிகள் அனைவரும் “பூமிபுத்திரன்” சின்னம் (பேட்ஜ்) அணிந்து வந்து மாநாட்டிற்கு சிறப்புரையாற்ற வரும் பிரதமருக்குச் சிந்தனை விருந்தளிக்க வேண்டும்!


ஆச்சேக்காரரான சனுசி ஜுனிட் கெடா மாநிலத்தின் முதலமைச்சரரானார். கடாரம் கொண்டவர்கள் நம் மூதாதையர்கள். அப்படியானால், நாம் யார்? இந்திய வம்சாவளியைச் சார்ந்த துன் மகாதீர் பூமிபுத்திரா என்றால், நாம் யார்? மரீனா மகாதீர் பூமிபுத்திரா என்றால், நாம் யார்?


இக்கேள்விக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வி.டேவிட்  ‘மலேசியாவில் பிறந்தவர்கள் அனைவரும் பூமிபுத்ராக்கள்.' என்று கூறினார்.
 

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு “பூமிபுத்ரன்” பிரகடனம் செய்துள்ளார். பரவாயில்லை: Better late than never!


நாம் இன்னொரு இருபத்தைந்து ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டுமா?
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com

இவ்வகப்பக்கத்தின் தகவல் பயனீட்டின் வழி ஏற்படும் எவ்வித இழப்பிற்கும் பாதிப்பிற்கும் மொழி நெட் பொறுப்பேற்காது