அண்மையில் "சிறிலங்காவில் மனித
குலத்திற்கு எதிரான குற்றச் செயல்" எனும் தலைப்பில்
ஒரு கண்டனக்கூட்டம் ஈப்போ சமூக நற்பணி இயக்கத்தின்
ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 300க்கும்
மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். ஈப்போ வாழ் தமிழ்
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறிலங்காவில் தொடர்ந்து
வரும் இனப்படுகொலைக்கு முடிவு காணும்
நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் ஈப்போ பாராட்
நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மு. குலசேகரன்,
ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச்
செயலாளர் திரு. லிம் குவான் இங்,
மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர்
திரு. இரா. திருமாவளவன்,
மனித உரிமைக் கழகத்தைச் சார்ந்த திரு.
பான் யூ தெங், வழக்கறிஞர் சி. பசுபதி,
முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள்
ஆகியோர் உணர்ச்சிமிகு உரையாற்றினர்.