"மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை"

நம் நாட்டின் விடுதலைக்கும் எழுச்சிக்கும் ஏற்றத் திற்கும் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈகம் செய்து உழைத்த மலேசியத் தமிழினம் இன்று நாதியற்ற இனமாக மறைமுகமாக அரசாங்கத்தால் நசுக்கப்பட்டு வருகிறது. இருந்த உரிமைகளும் சலுகை களாய் மாறி இன்று நம் நிலை கேள்விக்குறியாக மாறிவிட்டது.

உழைத்த இனம் உரு தெரியாமல் நிற்கிறது.  தம்  மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுரிமை ஆகியவற்றை குடிமகன் என்கிற முழு உரிமையுடன் பேணி பாதுகாக்க முடியாத அவல நிலையில் மலேசியத் தமிழினம் வாழ்ந்து வருகிறது.

இதற்கு யார் காரணம்?

1400 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவை தமது ஆட்சிக்குட்பட்ட மண்ணாக வரித்துக் கொண்ட தமிழினத்தை இன்று வந்தேறி இனமாக வரலாற்றில் மாற்றிப் போட்ட அவலங்களுக்கு யார் பொறுப் பேற்றுக் கொள்வது?

நம் மலேசியாவையும் அதனைச் சுற்றியுள்ள நாடு களையும் தமிழினம் ஆண்டதற்கான பதிவுகள் எங்கே? வரலாறு எப்படி மறைக்கப்பட்டது?

ஆண்ட  இனம் இன்று அடிமையைப் போல வாழ யார் வழிவிட்டார்கள்.?

நாடு விடுதலையடைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நம்முடைய உரிமைகள் எந்தெந்த காலக்கட்டங்களில் பறிக்கப்பட்டன. அந்த சதிகளின் பின்ணினியில் நம் தலைவர்களின் சாதனை என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

வரலாற்றை பாதுகாக்காத, பயிலாத இனம் இலக்கு நோக்கி பயணப்பட முடியாது. இந்நிலையை மாற்ற வேண்டும். எப்படி மாற்றுவது?

நம் நிலையை அளவிட ஒரு் அளவுகோள் இன்றைய முதல் தேவை.

அந்த அளவுகோளை வரலாற்று ஆவணமாக  தனி மனிதன் ஒருவனால் தொகுத்து விட முடியுமா? நூலாக்கதான் முடியுமா?

முடியும் என நம்பிக்கைத் தந்து நம்மை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் திரு. மா. ஜானகிராமன்.

15 ஆண்டு கால தம்முடைய உழைப்பை காணிக்கையாக்கி 450 பக்கங்களில் தமிழர் அவலங்களை நூலாக்கி தந்திருக்கிறார் மனித மேம்பாட்டு ஆய்வு மையத்தின் நிறுவனர் திரு. மா. ஜானதிராமன்.

பல்கலைக்கழங்கள், இயக்கங்கள் மு்ன்னெடுக்க வேண்டிய, செய்திருக்க வேண்டிய பெரும் பணியினை ஜானகி ராமன் ஐயா தனியொருவராக முயன்று சாதித்திருக்கிறார்.

மலேசியத் தமிழினம் அவருக்கு தலைவணங்க கடமைப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து இந்நூலை வாங்கி ஆதரவளிப்பதுதான். அவரின் உழைப்புக்கு நாம் செய்கிற கைமாறாகும்.

நூல் கிடைக்குமிடம் :

மா.ஜானகிராமன்

மனித மேம்பாட்டு ஆய்வு மையம்

No. 30, Jalan Gambus, 13-B, Taman Desawan, 41200 Klang, Selangor, Malaysia

கைப்பேசி எண் : +6 013-3927727

- க. பரிமளா

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com