"தமிழீழம் தமது
ஆஸ்திரேலியத் தளபதியை இழந்துவிட்டது."
'மாமனிதர்' தி.ஜெயக்குமார்
அவர்களின் மறைவுக்கு
மலேசியத்
தமிழர்கள் அஞ்சலி

தமிழீழ
விடுதலைப் புலிகளின் ஆஸ்திரேலியப் பொறுப்பாளர் "மாமனிதர்" தி.
ஜெயக்குமார் அண்ணனின் மறைவுச் செய்தி நம்மை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மலேசிய வாழ் ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கு
ஜெயக்குமார் அண்ணன் நன்கு அறிமுகமானவர்.
1998 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் எழுந்த ஈழ
ஆதரவின் எழுச்சிக்கு ஜெயக்குமார் அண்ணனின் பங்களிப்பு
அளப்பரியது.
ஆண்டுதோறும் மலேசியாவிற்கு வருகையளித்து
ஈழத்திற்கான மனிதநேயப் பணிகள் முடுக்கமாக முன் னெடுக்கப்பட
ஒத்துழைத்தவர்.
"தமிழீழம் தமது ஆஸ்திரேலியத் தளபதியை
இழந்துவிட்டது" என மலேசியத் தமிழர் அமைப்புகள்
இரங்கல் தெரிவித்துள்ளன.
மரணம் மாவீரர்களுக்கு தவிர்க்க முடியாதது
என்றாலும் ஜெயக்குமார் அண்ணனின் மறைவு ஈடு செய்ய முடியாதது.
அண்ணனின் மறைவால் துவண்டு போயிருக்கும் அவரின்
மனைவி யோகராணி, மகன் கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய பணியகப்
பொறுப்பாளர்களின் துயரில் மலேசியத் தமிழர்களாகிய நாங்களும்
பங்கெடுத்துக் கொள்கிறோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"