"மார்ச் 8" நூலுக்கு மலேசிய அரசாங்கம் தடை

கா. ஆறுமுகம் எழுதிய மார்ச் 8 புத்தகத்தை அரசாங் கம் தடை செய்துள்ளது . கடந்த 19.01.2007இல் வெளியான பெர்னாமா செய்தியின்படி மார்ச் 8இன் தடை கடந்த மாதம் முதல் அமுலாக்கப் பட்டதாகத் தெரிகிறது.

மலேசியாவில் வெளியிடப்பட்ட தமிழ்ப்புத்தகங்களில் எதுவும் இதுவரை தடை செய்யப்பட்டதில்லை. கா. ஆறுமுகத்தின் மார்ச் 8தான் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

மார்ச் 8  நூலுக்கான அரசாங்கத்தின் தடையை நீக்கக் கோரி உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் மீது உயர் நீதிமன்றத்தில் நூலாசிரியர்  வழக்கு தொடுத்து ள்ளார். மனித உரிமை ஆணையத்திலும் நூலாசிரியர் புகார் செய்துள்ளார்.

114 பக்கங்களைக் கொண்ட மார்ச் 8 கடந்த வருடம் ஏப்ரல் 8ஆம் நாள் வெளியீடு கண்டது. இதைச் செம்பருத்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு கம்போங் மேடான் வட்டாரத்தில் மார்ச் 8-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இன வன்முறை தலைவிரித் தாடியது. அதில் ஐந்து தமிழர்கள், ஒரு இந்தோனேசியர் கொல்லப்பட்டனர். தொன்னூறுக்கும் அதிகமான தமிழர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளானார்கள். 1969இல் நிகழ்ந்த மே-13 இனக்கலவரத் திற்குப் பிறகு நடந்த மோசமான வன்முறையாக மார்ச் 8 வன்முறை கருதப்படுகிறது. மலேசிய வரலாற்றில் பெரிய கரும்புள்ளியை உண்டாக்கிய இந்த வன்முறை பற்றிய ஆய்வுகளை மார்ச்-8 கொண்டுள்ளது.



இந்தத் தடையுத்தரவு சார்பாக நூலாசிரியர் கா. ஆறுமுகம் வழங்கிய நேர்காணல் வருமாறு:

ஆர்: யாரால் தடைசெய்யப் பட்டது?

கா.ஆ: பிரசுரம், பதிப்பகச் சட்டத்தின்கீழ் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு இந்தத் தடையைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆர்: தடையைப் பற்றி உங்கள் கருத்து?

கா.ஆ:இது வரலாற்றை மறைக்கும் முயற்சி என்பதால் இதனை ஏற்றுக்கொள்ள இயலாது. தடையுத்தரவை ஆட்சேபிக்க எண்ணியுள்ளேன்.

ஆர்: தடை செய்வதற்கான காரணம் எதுவாக இருக்கும்?

கா.ஆ: 2001-ல் கடந்த அந்த இன வன்முறை, ஓர் இனக் கலவரம் எனப் பலரும் முலாம் பூசினார்கள். அதை ஆய்வு செய்து பார்க்கையில் அது மலாய்க்காரர் தமிழர்கள் இடையே உண்டான சண்டை கிடையாது. அந்த நிகழ்வின்போது ஒன்று சேர்ந்த மலாய்க்காரர்களால் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. சுமார் 16 நாள்கள் நடைபெற்ற இந்த வன்முறையின்போது அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை... இதுபோன்ற தகவல்கள் பல.

ஆர்: தடைசெய்யக் காரணம்?

கா.ஆ: புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துகளை மக்கள் தெரிந்துகொள்ள கூடாது என அரசாங்கம் கருதுகிறது.

ஆர்: அரசாங்கத்தின் நடவடிக்கை மக்களை கட்டுப்படுத்துவதாக கருதுகிறீர்களா?

கா.ஆ: நாம் இப்போது ஒரு புதிய யுகத்தில் வாழ்கிறோம். இது போன்ற கட்டுப்பாடுகளால் மக்களைக் கட்டுப்படுத்த இயலாது. மக்களாகவே தங்களை ஒரு கூடைக்குள் போட்டு அடைத்துக் கொண்டால் ஒழிய அவர்களை கட்டுப்படுத்த இயலாது.

ஆர்: மார்ச் 8 புத்தகம் மக்களிடையே காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுமா?

கா.ஆ: தூண்டாது. என்னுடைய எழுத்துகள் அனைத்துமே இன ஒற்று மையை முதுகொலும்பாகக் கொண்டிருக்கின்றது. நடைமுறையில் உள்ள இனவா தமும் சமயவாதமும் ஆபத் தானவை. இனங்களுக்கிடையே பிரிவினைகளையும் வேற்றுமை களையும் உண்டாக்கும் நடை முறை அரசியல் சக்திளை வெகுவாக கண்டனம் செய்வது ஆழமாகப் படிப்பவர்களுக்குப் புரியும். மார்ச்-8 மீண்டும் நிகழாமல் இருக்க பலவகையான மாற்றங்கள் தேவை. அவற்றை அந்நூலில் பட்டியல் போட்டுள்ளேன்.

ஆர்: மார்ச்-8 படிப்பது குற்றமாகக் கருதப்படுமா?

கா.ஆ: படிப்பது குற்றம் கிடையாது. மார்ச்-8-ஐ விற்பனையும் விநியோகமும் செய்ய இயலாது.

ஆர்: தடை உத்தரவைப் பற்றி உங்கள் மனநிலை?

கா.ஆ: பலரும் என்னைப் பாராட்டுகிறார்கள்.

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com