தமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை
திட்டமிட்டுக் கொல்லப்படுகிறது ஆட்சியில் இருப்பவர்களால்!

ஜீவி காத்தையா

 

மொழி ஒரு கலாசாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாசாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துவிடும். இது வரலாறு கண்ட உண்மை.

இந்நாட்டில் தமிழ்க் கலாசாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாசாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ் தொடக்கப்பள்ளிகள். இவை இந்நாட்டிலுள்ள தமிழ் இனத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன. ஆலயங்களும் தமிழ்க்கலாசாரத்தை நிலை நாட்டுகின்றன. சில பொதுஅமைப்புகளும் தமிழ்க்கலாசாரத்தைப் பாதுகாப்பதில் மற்றும் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுகின்றன.

இவற்றில் மிக முக்கியமானது தமிழ்ப்பள்ளிகள். தமிழ்ப்பள்ளிகள் அழிந்தால், தமிழ்மொழி அழிந்து விடும். அதனைத் தொடர்ந்து தமிழ்க்கலாசாரம் அழியும். இறுதியில் இனமும் அழிந்துவிடும்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்துப் பல கருத்துகள் நிலவுகின்றன. பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டை ஆளும் பாரிசான் நேசனலின் பங்காளியான மஇகாவும், அதன் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவும் தமிழ்ப்பள்ளிகள் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி உயர்ந்து கொண்டிருப்ப தாகக் கூறுகிறார்கள். இன்றையத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை, தரம், எண்ணிக்கை மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ள வர்களின் கருத்து தமிழ்ப்பள்ளிகள் சவக்குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதாகும்.

இக்கருத்தை ஏற்றுக் கொள்ளாத டத்தோஸ்ரீ சாமிவேலு இவ்வாறான கருத்தைக் கொண்டிருப் பவர்கள் தமிழ்ப்பள்ளி மெல்ல மடியும் என்று சொல்லி மகிழும் “மேதாவிகள்" என்று ஏளனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸைப் போன்ற தான் என்ற அகங்காரம் கொண்டவர்களின் குணம் இது.

தமிழ்ப்பள்ளி மெல்ல மடியவில்லை. திட்டமிட்டுக் கொல்லப்படுகிறது, டத்தோஸ்ரீ சாமிவேலு ஒட்டிக் கொண்டிருக்கும் பாரிசான் அரசால். இக்கொலைத் திட்டம் 1951 ஆம் ஆண்டில் உருவாகத் தொடங்கியது.

அன்றையக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் கல்விக் கொள்கையினால் தமிழ்ப்பள்ளிகள் மற்ற இனப் பள்ளிகளைப் போல் முன்னேற்றம் காணாமல் பின் தள்ளப்பட்டு விட்டன என்பது தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடை யவர்களின் கருத்து. அப்பேர்ப்பட் டவர்களைத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு “மேதாவி”கள் என்று ஏளனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த “மேதாவி”களின் வரிசை யில் டான்ஸ்ரீ டத்தோ ஜி. வடிவேலும் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. டான்ஸ்ரீ ஜி. வடிவேலு மஇகாவின் பொதுச் செயலாளராகவும் நாடாளுமன்ற மேலவையின் (Dewan Negara) தலைவராகவும் (President) இருந்திருக்கிறார். அவர் கூறுகிறார், “தமிழ்ப்பள்ளிக்கூட மாண வர்கள் மற்ற தொடக்கப் ப