எங்களைப்பற்றி
மொழி இனத்தின்
உயிர்.
உலகத்திலேயே
காப்புணர்ச்சி இல்லாதவன் தமிழக
மரபின தமிழன் மட்டுமே.
இடம் பெயர்ந்த
நாடுகளில் கூலியாய் வாழ்ந்தோமே தவிர நமக்கான அடையாளங்களை
பேணிக் காக்க தவறிவிட்டோம்.
மலேசியாவில் 18
இலக்கம் இந்தியர்களில் 85 விழுக்காட்டினர் தமிழர்கள்.
இந்தியர்
என்கிற இன அடையாளத்தால் நாம் இழந்தது அதிகம்.
மொழி உரிமை குறித்து நமக்கு அக்கறை இல்லை.
சமய உரிமை குறித்த தெளிந்த பார்வை இல்லை.
கல்வி அடிப்படை உரிமை என்ற உணர்வில்லை.
மக்களின்
அறியாமையை அலசிக் காட்ட முடியுமா என நாம் சிந்தித்தோம்.
அதன் விளைவுதான்
மொழி இணையத்தளம்.
மொழி நெட்
இணைத்தளம் மலேசியத் தமிழரின் ஆவணக் காப்பகம்.
தனி மனிதனின்
முயற்சியில் தடங்கல் இயல்புதானே!
வாய்ப்புள்ளவர்கள் எமக்கு உதவலாம். எம்மோடு இணைந்து
கொள்ளலாம்.
மாற்றுச் சிந்தனையாளர்கள் கூட சறுக்கி விழுகிற நிலையில்
மொழி நெட் அமைதியாய் நிறைவாய் தமது பணியினை செய்யும்.
யாரும் செய்யவில்லை என பிதற்றுவதைவிட நாம் செயல்படுவோம்.
காணிக்கை
மலேசியத்
தமிழர் விடுதலை வரலாற்றின் வித்துகளான
மாவீரர் மலேயா கணபதி, வீரசேனன் மற்றும் மொழி, இன, சமய
போராளிகள் அனைவருக்கும்
மொழி நெட் வீர வணக்கம்
செலுத்திக் கொள்கிறது.
எழுது
எழுது எங்களை ஊக்கப்படுத்தி இன்றும் நினைவுகளாய் இருந்து
வழிகாட்டுகிற
சிந்தனையாளர் கணபதி கணேசன் அவர்களுக்கும்,
செயற்கரிய
செயல்களாலும் அரும்பெரும் கருத்துகளாலு்ம உலகத் தமிழர்களை
உய்விக்கிற
எங்கள் தலைவர்கள் முருகன்,
வள்ளுவர், வள்ளலார், பெரியார், பழ.நெடுமாறன், பிரபாகரன் ஆகியோருக்கும்
மொழி நெட்
இணையத் தளம் காணிக்கை