பழந்தமிழர் பரவிய நாடுகள்
சொல்லாய்வறிஞர் கு.
அரசேந்திரன்
தமிழரின்
தொல்பழங்கால வரலாற்றினைக் கற்றுவரும் மாணவன் யான். இந்த வரலாற்றைக்
கற்றுத் தரும் நூல்களைத் தேடித் தொகுத்து அவற்றினூடு வாழ்ந்து
வருவதில் மகிழ்ச்சியடைபவன். இவ்வேளையில் தமிழர் தேசிய இயக்கத்
தலைவரும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தந்தை பெரியாருக்குப்
பின் பட்டம், பதவி, அரசியல் நலம் நாடாமல் தமிழர் நலனுக்காகத் தம்
அரிய வாழ்நாட்களைச் செலவிட்டு வருபவ ருமான மாவீரன் பழ. நெடுமாறனார்
அவர்கள் சிறையிருந்து நோற்றெழுதிய பழந்தமிழர் பரவிய நாடுகள் என்னும்
நூலைக் கண்ணுற்றேன். என் கருவி நூற்பட்டியலில் ஒன்றாகச் சேர்த்து
தமிழர் வரலாற்றைச் சொல்லிக்கொடுக்கும் நூலாக இது திகழ்கின்றது.
மொழிஞாயிறு பாவாணரிடம் தமிழ் என்னும் நம் தாய்மொழி உலக முதன்மொழியே
என்பதைக் கடந்த முப்பத்தாண்டுகட்கும் மேலாக அவரின் நூல் வழியாகக்
கற்று விளங்கிக் கொண்டவன் யான். ஒவ்வொரு நாளும் அவரின் வழியில்
உழைக்கும்போது தமிழ்மலர் உலகெங்கும் பரவி உலகமொழிகெட்கெல்லாம்
மனமளித்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. உணர்த்த முடிகிறது;
மாவீரன் நெடுமாறனாரின் இந்த நூலுக்கு அறிமுகவுரை எழுதும் பேருபெற்ற
யான் தமிழ் - தமிழரின் உலக முதன்மையை இந்த நூலை அறிமுகப்படுத்தும்
பணியோடு சேர்த்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
‘பழந்தமிழர் பரவிய நாடுகள்' என்னும் நூலில் ஆசிரியர் தமிழர்
தென்கிழக்காசிய நாடுகளில் பரவிச் செழித்திருந்த வரலாற்றையே
மிகுதியும் விவரித்துள்ளார். நூலின் பதினொரு தலைப்புகளில்
‘தமிழினத்தின் தாயகம்' என்னும் முதல் தலைப்பு தமிழர் இந்தியா
முழுவதும் பரவியிருந்ததையும் பிறகு அவர்கள் சிந்துவெளியைத் தாண்டி
சுமேரிய, மெசபட்தோமிய நாகரிங்களாக வளர்ந்து விரிந்ததையும்
வரலாற்றறிஞர்கள் விளக்கிய தடத்தில் சென்று எழுத்தியுள்ளார். தமில்,
திராவிட மொழிகட்குத் தாய் என்பதையே துணிந்து எழுத முடியாத
அறிஞர்களிடையே பாவாணர்தான் அது கீழை, மேலை ஆரிய மொழி கட்கும்
மூலமாகி உலக முதன்மொழியாகவும் இலங்குகிறது என்னும் உண்மையை
நிலைநாட்டினார்.
“மேலையாரியரின் முன்னோரான வடதிராவிடர் வடமேலை ஐரோப்பவிற்குக்
குடியேறினர். அங்கு அவர்மொழி தியூத்தானிய (Teutonic) ஆரியமாகத்
திரிந்தது. அது பின்னர் இலத்தின முறையிலும் அதன்பின் கிரேக்க
முறையிலும் மாறிற்று'. (தமிழர் வரலாறு ப. 161 - 62)
“வடதிராவிடருள் ஒருசாரார் வடமேற்காகச் சென்று ஐரோப்பாவின் வடமேலைப்
பகுதியை (செருமானிய காண்டினேவியத்தை) அடைந்ததனால், அவ்விடத்துத்
தோன்றிய தியூத்தானியம் (செருமானியம்), ஆரியக்கிளைகள்
எல்லாவற்றுள்ளும் தமிழுக்கு மிக நெருக்கமாகவுள்ளது". (ப. 166)
என்றெல்லாம் பாவாணர் எழுத்தித் தமிழர் வரலாறு உலக வரலாறாக
விரிந்திருப்பதை நமக்கு விளக்கினார்.
‘வெல்' என்பது ஒரு தமிழ்வேர். இது வெப்பப்பொருளது, அதன் வழி அது,
வெளிச்சப் பொருளையும் பெறும். வெல் - வெல்கு - வெக்கு - வெக்கை;
வெல் - வெல்கு - வெப்பு - வெப்பம்; வெல் - வெல்கு - வெப்பு - வெம்பு;
வெல்- வெய் - வெய்யில்; வெல் - வெள் - வெள் + து - வெட்டு - வெட்டை
என்றெல்லாம் இவ்வேர் தமிழில் விரிவதை விளக்கலாம். வகர - பகர மாற்றம்
தமிழ் வடக்கேயும் வடமேற்காகவும் செல்லும்போது ஆகும். அந்த வகையில்
வெக்கு - வெக்கை என்பது பெக் – பேக் என்று மேலை யாரியத்தில் மாறும்.
மாவுணவு அடப்பட்டு விற்கப்படும் இடம் ‘backery'. இதனைத்
தமிழீழத்தில் ‘வெதுப்பகம்' எனப் பெயரிட்டழைப்பர். மா உணவு இங்கே
வெப்பப்படுத்தப்பட்டு உண்ணத்தரப்படுகிறது.
Bake - cook(food) by dry heat in oven or on a hot surface,
without direct exposure to flame. - C.O.D. என ஆங்கில அகராதி
கூறுவதில் தமிழின் வெக்கையாகிய மூல உண்மை பதியப்படவில்லை.
‘வெளிச்சம்' என்னும் ஒளித் தமிழ்சொல்தான் blaze, bleach
போன்றெல்லாம் மேற்கே மாறிக்கிடக்கின்றது. சான் அயிற்றோ (John Ayto)
என்பார் வரைந்த சொன்மூலம் (word origins) என்னும் நூல் குளித்தலைக்
குறிக்கும் “bath" என்ற சொல்லையும் தமிழின் வெக்கையுடன் சேர்க்க
வழிகாட்டியுள்ளது. குளிர்நாட்டினர் வெண்ணீரில் குளிப்பர். அங்கு
குளியல் என்பது குளித்தல் தேவையைவிட உடலை வெப்பப்படுத்திக்
கொள்வதற்காகவே நிகழ்கிறது. ஆதலால் ‘bath' என்னும் குளியற்சொல் ‘batham',
‘bake' ஆகிய வெப்பப் பொருட்சொல்வழி உருவாயிற்றென்று அவர்
தெளிவுப்படுத்தி “that the original notion contained in the world
was of ‘heat' rather than ‘washing' ". என விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மேலையாரியமாக விரிந்தது: தமிழினமே மேற்குலகம் சென்று வேறு
இனமாகவும் மாறியது என்னும் பாவாணர் கூற்று முற்றுமுழுதான உண்மை.
தமிழ்ச்சொல் மேலை மொழிகளில் கலந்திருப்பதை உணர்ந்த மொழிநூல்
அறிஞர்களும் வரலாற்றறிஞர்களும் தமிழர்கள் மேலை உலகோடு வணிகம்
செய்ததனால் ஏற்பட்ட கலப்பென்று எழுதினர். உண்மையில் தமிழினமே
மேலையினமாகவும் சென்று வாழ்ந்து வருகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.
15,000 ஆண்டுகட்கு முந்தைய பரவல்
நம்மை ஒத்த அறிவுமாந்தன் (Homo Sapiens) தோன்றி 50,000 (ஐம்பதினாயிரம்)
ஆண்டுகள் ஆகின்றதென்பர் மாந்தநூலர். நெருப்பைத் தாமாக உருவாக்கக்
கற்றுக்கொண்டதும் மொழி படைக்கத் தொடங்கியதும்
இக்காலக்கட்டத்தில்தான் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழாம்
நம் தாய்மொழி 50,000 ஆண்டிலிருந்து உருவாகத்தொடங்கிற்று என்பார்
பாவாணர். நெருப்பை உருவாக்கிய பிறகுதான் உணவின் சுவையை அவன்
அறிந்தான். நாவினால் சுவைத்து உணவின் சுவையை அறிந்த அந்த அறிவே
முதலறிவு என்றும் பிறகு பிறபிற புலன்களால் அறியப்பட்ட அறிவையும்
அவ்வறிவு குறித்ததென்றும் இலத்தீன் அகராதி ‘Sapio' என்ற சொல்பற்றி
விளக்கமளிக்கையில் மொழிகிறது. தமிழின் ‘சப்புதல்' சொல்லே sapio என
இலத்தீனில் திரிந்தது.
வரலாற்றுச் சுருக்கம் (The Outline of History) என்னும் நூலில் அதன்
ஆசிரியர் எச். சி. வெல்சு (H.G. Wells) ஆதிமாந்தன் ஓரிடத்திலிருந்தே
உலகெங்கும் பரவினான் எனவும் எந்தக் காலக்கட்டத்தில் பரவினான் எனவும்
எப்படிப்பட்ட தோற்றமுடையவனாக அவன் இருந்தான் எனவும் சொல்லியுள்ளார்.
உலக வரலாற்றில் கி. மு. 15,000 - 1,000 வரையிலான காலம் கதிரவக்
கற்காலம் எனப்படும். புதிய கற்காலம் எனப்படுவதும் இதுவே.
கதிரவனுக்குக் கல்நட்டு அக்காலக்கட்டத்தில் மக்கள் வழிபாடு
நிகழ்த்தினர். இக்கால கட்டத்தில் பழுப்புநிற மேனி உடையவர்கள்
வெப்பநாட்டினின்று உலகெங்கும் பரவினார்கள் என்பர் அறிஞர் வெல்சு.
“For thousands of years, from 15,000 to 1000 B.C., Such a
heliolithic Neolithic culture and its brownish possessors may
have been oozing round the globe through the warmer regions of
the world, drifting by canoes often across wide stretches of
sea"
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்றார் இளங்கோ. உச்சிக்கிழான்
கோட்டம் பூம்புகாரில் இருந்ததை அவர் சிலம்பில் குறித்திருக்கிறார்.
“உலகம் உவப்ப வலனேர்வு திரிதரும் பலர்புகழ் ஞாயிறு" என ஞாயிற்றைப்
புகழ்வார் நக்கீரர். சூரியனார் கோயில் என்னும் ஊர் கதிரவனுக்கு
உரிய கோயில் உள்ள தமிழ்நாட்டு ஊராகும். ஞாயிற்றைக் குறிக்கும் வேறு
தமிழ்சொற்களில் ‘எல்' என்பதும் ஒன்று. இன்றும் தமிழ்நாட்டில் ‘எல்லப்பன்'
எனப் பெயரிட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு.
தமிழின் ‘எல்' என்னும் சொல்லைத் தமிழர்கள் சிந்துவெளியத் தாண்டி
இந்தியாவிற்கும் அப்பால் சென்றபோதும் பேசிக்கொண்டு சென்றார்கள்.
மேற்குலகம் சென்ற ‘எல்' என்னும் சொல் எப்படியெப்படி எல்லாம் அங்குப்
பலப்பலச் சொற்களை ஈன்று வளர்ந்துள்ளது என்பதை ஒரு நூலாகவே நாம்
எழுதி வைத்துள்ளோம்.
‘எல்' என்னும் சொல் அதே வடிவிலும் ‘ஹெல்' எனச் சற்றுத் திரிந்த
வடிவிலும் மேற்கின் பழம்பெரும் நாகரிகங்களில் ஒளிவீசுகிறது.
‘ஆண்குறி வழிபாடு' (Phalic worship) என்னும் நூல் சார்ச்சு ரைலி
சுகாட் (George Ryllic Scott) வரைந்தது. கதிரவன்சொல் மேலை உலகில்
இடம்பெற்றதைப் பற்றி அந்நூலில் குறித்துள்ளது வருமாறு.
EL. Sun-god of the Syrians and semities.
EL. Belus - An Asssyrian and Babylonian Sun-god. The tower of
Babel was erected for the worshipping of this deity.
Helios - Sun-god of ancient Greace.same as Helius of the
Egyptians.
Helius - An Egyptian sun-god, married to ops. Same as Helios of
the Greeks (ப. 272 - 273)
கிரேக்கப் பழங்குடிகளுள் தெசலியன் (thessalian) என்றொரு
முதன்மைக்குடி இருந்தது. இக்குடி ‘Hellene' என அழைக்கப்பட்டது.
பின்நாளில் ‘Hellene' என்னும் பெயர் முழு கிரேக்க இனத்திற்கும்
உரியதாகிவிட்டது. இது ஆக்சுபோர்டு ஆங்கிலப் பேரகராதி தரும் விளக்கம்.
Hellene - also Helien
- The pl. accurs first in Homer, as the name of a Thessalian
tribe of which hellen was chief: in the historical period it was
the name applied to themselves by all Greeks,
தமிழ் மூவேந்தர்களில் சோழர் ஞாயிற்றுக்குலம் எனப்பட்டனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மேற்குலம் சென்ற தமிழர் கிரேக்கர்
என்ற பெயரில் ‘எல்' என்னும் சொல்லால் eleen, Hellene எனப்பட்டனர்.
இந்தியாவில் வாழ்ந்த திராவிடர்கள் எகுபது வரை பரவியிருந்தனர் என
வெல்சு கூறுவார்.
“Wilfred scaven Blunt says that Huxley had a long suspected a
common origin of the Egytians and the Dravidians of India,
perhaps along belt of brown skinned men from India to Spain in
very early days". (ப. 138)
வேளாண் தொழில் கற்றுப்
பரவிய காலம்
“தமிழர்கள் வணிகர்களாக மட்டும் வாழவில்லை: சிறந்த உழவர்களாகவும்
திகழ்ந்த்தார்கள்" என இந்நூலில் ஆசிரியர் கூறியுள்ளார்.
புதிய கற்காலத்தில் கி. மு. 7000 ஆண்டளவில் நடுக்கிழக்குப் (Middle
East) பகுதியில் முதன்முதல் வேளாண்மை தொடங்கப்பெற்றதென பிரித்தானிய
கலைக்களஞ்சியம் கூறுகிறது.
“with the achievement of agriculture in Neolithic times in the
Middle East about 7,000 B.C. there came a new urgency to clear
bush and trees. The first agriculturists made of fire to clear
fields and to produce ash to serve as fertilizer,"
பிரித்தானிய கலைக்களஞ்சியம் கூறுவது உண்மையன்று. தமிழர்கள் வேலாண்
வாழ்க்கையைக் குமரிக்கண்டம் கடலில் மூழ்காத காலத்திலேயே தொடங்கி
விட்டார்கள். அவர்களிடமிருந்துதான் அத்தொழிலும் பல இடங்கட்கு
பரவியது. தமிழ் மூவேந்தர்களில் ‘வளவன்' என்ற பொதுப்பெயர் சோழர்கட்கு
மட்டும் உண்டு, அவர்கள் நாடே ‘வளநாடு' என அழைக்கப்பட்டது.
சேரநாட்டினும் பாண்டிய நாட்டினும் நீர்வளம் மிக்க நாடாகக் காவிரித்
தாயின் துணையால் சோழநாடு திகழ்ந்தபடியால்தான் ‘வளம்' அங்கு மட்டும்
சேர்வதாயிற்று. பண்டைக்காலத்தில் நாட்டுவளம் என்பது வேளாண்மை
சார்ந்ததே. இந்த ‘வள' உண்மையை நமக்கு விளக்கும் பாவாணர், ‘செழியன்'
என்ற பெயர் பாண்டியப் பெருவேந்தர்கட்கு எப்படி வந்திருக்க முடியும்
என்று எண்ணிப் பார்த்திருக்கின்றார். பாண்டிய நாடு கடல்
கொள்ளப்படாததன் முன்பு பஃறுளியாறு அங்கு ஓடியது. பன்மலை
அடுக்கங்களுக்கு இடையில் அவ்வாறு ஓடியதால் அப்பழம் பாண்டிநாடு
செழிப்பாக இருந்தது. அவ்வேளையில் அவர்கள் ‘செழியன்' பட்டம்
பெற்றார்கள். பழம் பாண்டி நாடு கடலுள் சென்ற பிறகும் அச்செழியன்
பட்டத்தைப் பாண்டியர்கள் தொடர்ந்தார்கள்.
சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்கள் வேளாண்கலையில் வல்லவர்களாகத்
திகழ்ந்ததை திருத்தந்தை ஈராசுப் பெருமகன் சிந்துவெளி ஆய்வு நூலில்
விளக்கியுள்ளார். பழஞ்சிந்து (Ancient Sind) என்னும் நூலின்
ஆசிரியர் மாரிவாலா (C.L.Mariwalla) சிந்துவெளியில் உழுதொழில்
கருவிகள், கூலங்கள் அரைக்கும் இயந்திரங்கள் ஆகியன கிடைத்த செய்தியை
எழுதியுள்ளார். (ப. 25 - 26)
இலேநாடு உல்லி (Sir Leonard Woolley) தமது ஊர் நூல் (Ur of
Chaldees) ஆராய்ச்சியில் சுமேரியர்கள் கிழக்கேயிருந்து
வேளாண்தொழிலையும், மாழைகள் உருக்கும் கலையையும் எழுத்து முறையையும்
கற்றுக்கொண்டு மேற்கு நோக்கி வந்தோமென நம்புவதாக எழுதியுள்ளார்.
“The Sumerians believed that they came into the country with
their civilization already formed bringing with them the
knowledge of agriculture, of working in metal, of the art of
writting". (ப. 14)
தொல்கிழக்கு (The Most Ancient East) என்னும் நூலாசிரியர் கார்டன்
சில்தி (Gordon Childe) வேளாண் தொழில் கிழக்கே சிந்துவெளியிலிருந்து
அல்லது அதனோடொட்டிய பகுதியிலிருந்து சுமேரியாவிற்கு வந்திருக்கலாம்
என்கிறார்.
“Where then the innovations and discoveries that characterized
Proto - Sumerian civilization not native development on
Babylonian soil but the results of Indian civilization? If so
had the Sumerians came from Indus or atleast from some region
with in immediate sphere of influence" (ப. 212)
தமிழில் வழங்கும் ‘தொண்டு', ‘தொழில்' என்னும் சொற்கள் முதற்கண்
வேளாண்மையைக் குறித்தன என்பார் பாவாணர். இவ்விரு சொற்களின் வேர் ‘தொள்'
என்பது. நிலத்தில் துளை செய்து அதாவது உழுது பள்ளம் செய்து
மேற்கொண்ட தொழிலே வேளாண்மை. நிலத்தைக் கல்லி அதாவது பள்ளம்
பறித்துக் கொடுக்கும் கருவி ‘கலப்பை' எனப்பட்டது. ‘தோட்டல்' சொல்
துளைத்தல் பொருள் குறிக்கும். ‘தோட்கப்படாத செவி' வள்ளுவர் கூறியது.
இந்தத் தோட்டல் செயலுக்குரிய இடமே தமிழில் தோட்டம் எனப்படும்.
கல் - கல்லு என்னும் துளையிடுதல் சொல்தான் colo, colere என்று
இலத்தீனில் நிலம் தோண்டுதலையும், உழவையும் குறித்தது. Cultivate
என்ற ஆங்கிலமும் அதன் வழியதே. ‘கன்னம்' என்னும் தமிழின்
துளைப்பொருட்சொல் கர்ன் என வட விந்திய மொழிகளில் திரிந்து karsana,
karsi என்றெல்லாம் உழவைக் குறிக்கிறது. இதே துளைக்கன்னம் எபிரேய
மொழியில் ‘gan’ என நின்று தோட்டத்தைக் குறிக்கின்றது.
கப்பல்
கலையுடன் பரவினர்
கி. மு. 1000 ஆண்டளவில் இயற்றப்பட்டதெனப்படும் ஆரியரின் இருக்கு
வேதத்தில் ‘பாணியர்' என்போர் குறிக்கப்படுகின்றனர். வணிகர் என்னும்
தமிழ்சொல்லே ஆரியர் நாவில் அவ்வாறு சொல்லப்பட்டதென்பர் பி. தி.
சீனிவாச ஐயங்கார். மேலை உலகில் ‘பினீசியர்’ எனப்படுவோர்
இவ்வணிகர்களே என ந. சி. கந்தையா போன்றோர் எழுதியுள்ளனர்.
நெடுமாறனாரும் இந்நூலில் ‘பினீசிய நாடும் தமிழகமும்' என்ற தலைப்பில்
இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
பினீசியர்கள் நண்ணிலக் கடற்கரை ஓரத்தில் பல இடங்களில் நாடமைத்துப்
பரவி வாழ்ந்தார்கள் என உலக வரலாற்றறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர்.
இன்றைய சுபெயின் (Spain) பண்டு இத்தமிழ் வணிகர்கள் உருவாக்கிய
தேசமேயாகும். இந்நாட்டின் பெயர் பண்டு ‘Hispania’ என்பதே. மக்கள்
வாழ்க்கை (The lives of the people - Gladys Mcgill) என்னும் நூல்
நம் தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு நிறைய அடியெடுத்துக் கொடுக்கின்றது.
கடல் குறிக்கும் சொற்களும் கடற்செல்கலம் குறிக்கும் சொற்களும் மேலை
உலகில் தமிழ் சொற்களாக இருப்பதைப் பாவாணர் எழுதியுள்ளார். தமிழ்
வணிகர்களாகிய இந்தப் பினீசியர்கள்தான் உலகில் முதன்முதலாகக் கலம்
செலுத்தியவர்கள் என்பதை மேற்சொன்ன நூல் வரையறுத்துரைக்கின்றது.
“As far as we know, the Phoenicians were the first people in the
world to make their living this difficult and dangerous
occupation" (ப. 53 - 54)
நீல ஆற்றங்கரை (Nile civilization) நாகரிக உடைவின் பின் அதிலிருந்து
உருவாக்கிக் கொள்ளப்பட்ட நாகரிகமே கிரேக்க நாகரிகம். அக்கிரேக்க
நாகரிகத்தின் பரந்து விரிந்த நாகரிகமே மேலை நாகரிகம். இந்த எல்லா
நாகரிகத்தையும் அளித்த மூல நாகரிகமே தமிழ் நாகரிகம். எகுபதியர்கள்
தமிழின் ‘படகு' சொல்லினை ‘barca' என்றனர்.
Baris - an Egyptian barge
என்ரு இலத்தீன் அகராதி கூறும். தமிழின் ‘குடகு' இன்று மேலையர்
நாவில் ‘coorg' ஆனபோது ஏற்பட்ட ‘டகர' ‘டகர' ஒலி மாற்றமே படகு baris
- barge என்று பல்லாயிரமாண்டுகட்கு முன்பு ஏற்பட்டதும்.
இவ்வறிமுகவுரையில் முன்னர் மொழிந்த சான் ஆயிற்றோ (John Ayto) வின்
அகராதி ‘embark' சொல்லிற்களிக்கும் விளக்கம் பாருங்கள்.
Embark - To embark is literally to ‘put or get on to a boat' -
or more specially a ‘bargue' (a word acquired ultimately from
late Latin barca, which is probably related to English barge).
It is immediate French ancestor, barque, formed the basis of a
compound verb embarquer, borrowed by English as embark. The
antonym disembark also dates from the 16th century.
இவ்வகராதிப் பகுதியை அப்படியே நாம் தந்திருப்பதற்குக் காரணம் இந்த
அரிய விளக்கப்பகுதியில் நம் தமிழ்ப்படகு பதுங்கி அமிழ்ந்து
போய்விட்டதே என்ற உணர்வை நாம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
தமிழினம்தான் இந்தியாவின் மூல இனம். எகுபதிய, சுமேரிய, மெசபத்தோமிய,
கிரேக்க, மேலை நாகரிகங்களாகக் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளாக உலகில்
உடைந்து உடைந்து மாறிக் கொண்டுள்ளதென்பதை இந்தப் படகு சொல்
ஒன்றிலிருந்து கூட உணர்ந்து கொள்ளலாம். கருநாடகத்தின் ‘மடிகேரி'
என்ற ஊர்ப்பெயரை ‘Mercera' என்றுதான் நேற்று வந்த வெள்ளையர்
பலுக்கினர். தாயின் வரலாற்றை விட்டுவிட்டு எழுதும் வரலாற்றில்
உண்மையும் முழுமையும் இருக்க முடியாது.
குமரிக்கண்ட
துண்டுக்காணிகளில் தங்கியமை, பரந்தமை:
தலைவர் நெடுமாறனாரின் ‘பழந்தமிழர் பரவிய நாடுகள்' நூல் முதற்கண்
கூறியபடித் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் பரவி வாழ்ந்த
வரலாற்றையே அதிகம் விளக்கியிருக்கின்றது.
ஒரு துறையில் நூலை எழுதுவதற்கு முதற்கண் அத்துறையில் ஆழமான
அக்கறையிருக்க வேண்டும். அதன்பின் அக்கறையை அடைவதற்குப் போதுமான
நூல்கள் பெற்றாக வேண்டும். தென்கிழக்காசிய நாடுகள் பற்றி நம்மில்
பலரும் கவனம் செலுத்துவதில்லை. நமக்கெல்லாம் இன்று உலகம் என்றால்
மேலை உலகமே முதற்கண் நினைவிற்கு வருகிறது. நம் முதலாளிகளாக நம்மை
இயக்குபவர்களாக இம்மேலை உலகினர் இருக்கிறார்கள். குமரிக்கண்டத்தில்
துண்டுக் காணிகளாய்க் கடலில் மிதக்கும் இலங்கை, மியன்மா (பர்மா),
காம்பூச்சியா (கம்போடியம் - காம்போசம்), வியட்நாம் (சம்பா), மலேசியா,
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள் ஆகியன பற்றி அதிகம் அக்கறை
செலுத்துவதில்லை. அத்தகு நிலையில் இந்நாடு களைப் பற்றித் தமிழர்
தலைவர் நூலெழுதியிருப்பது அதுவும் சிறையில் தனிமைச் சிறையில் வதங்கி
யுறைந்த காலத்தில் கிடைத்தற்கரிய நூல்களைத் தேடித் தொகுத்து
இந்நூலினை உருவாக்கி இருப்பது வியப்பினும் வியப்பு.
தமிழ், தமிழின மறுமலர்ச்சி ஊழியைத் திருவள்ளுவர் தொடங்கினார்
என்பார் பாவாணர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்பணி முடிவு பெறாமல்
தொடர்கின்றது. இன்று மாவீரன் நெடுமாறனார் அப்பணியைத் தொடர்கின்றார்.
எத்தகைய மனநிலையில் சிறைக்கோட்டதில் இருந்த போது இந்த நூலை எழுத
வேண்டும் என முடிவு செய்திருப்பார் என அறியோம். “தம்பியுடையான் பகை
அஞ்சான்" என்பது கம்பர் பெருமான் வாசகம். தம்பியை நினைத்து
தம்பியின் நாட்டினை நினைத்து அதனைச் சூழ்ந்த ஏனைய நாடுகளையும்
அவையெல்லாம் தமிழர் நாடுகளாக இருந்த நிலையினையும் வரலாற்றுணர்வோடு
எண்ணியிருக்கலாம்.
கி. பி. 4 - 5ஆம் நூற்றாண்டில் பக்தியியக்கம் தமிழகத்தில் உருவானது.
அப்பக்தியியக்கம் கடல்கடந்த தென் கிழக்காசிய நாடுகளிலும் பரவியது.
தமிழ்ப் பக்தியியக்கம் வளர்ந்த நிலையில் தமிழுக்கும் தமிழர்க்கும்
உதவாத வந்தேறிப் பகைவர் கைக்குள் மெல்ல மெல்ல சென்று சேர்ந்தது.
என்றாலும் 13ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கட்கு அரசுகள் இருந்தபடியால்
தமிழர் பின்பற்றிய சமயங்கட்கும் தமிழர்கட்கும் ஓரளவு பாதுகாப்பு
இருந்தது. இந்தியாவில் பிறந்த பௌத்தத்திற்கும் தமிழகத்திற்கு அயலில்
தோன்றிய இசுலாதிற்கும் வலிமையான அரசுகள் இந்தியாவிற்கு வெளியே
உருவாகியிருந்தன. அவ்வரசுகள் சார்ந்த மக்கள் அவ்வரசுகளின் துணையோடு
இத்தென்கிழக்க