"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
மே. 3, 1939 -நோவ்ஸ்கோடியா தோட்டப்
பிறப்புச் சான்றிதழ்
மலாயாவின்
கனிவளங்கள் மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்குப்
பெரும்பங்காற்றியுள்ளன என்பதை மறுத்திட இயலாது. இங்குள்ள கனிவளங்கள்
பெருவாரியாக மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அக்காலத்தில் மலாயா, உலகிற்குத் தேவைப்படும் ரப்பர்
உற்பத்தியிலிருந்து நாற்பது விழுக்காட்டினைக் கொடுத்தது என்பது
வரலாற்றுச் செய்தியாகும். அத்தோடு உலகப் பயன்பாட்டிற்குத்
தேவைப்படும் மொத்த ஈயத்திலிருந்து அறுபது விழுக்காட்டினையும்
கொடுத்தது. இவை பெருவாரியாக அமெரிக்காவிற்கும் இன்னபிற மேற்கத்திய
நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.
முதலாம் உலகப்போருக்குப் பின்னர் ஜப்பான் பெரும் பொருளாதாரப்
பாதிப்பினை எதிர்நோக்கியது. ஜப்பான் தனக்குத் தேவையான
விளைபொருள்களையும் கனிவளங்களையும் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து
பெற முற்பட்டது. குறிப்பாக மலாயா, பர்மா, இந்தோனேசியா முதலிய
நாடுகளிலிருந்து இவற்றினைப் பெற முனைந்தது. அதனையொட்டி 1941-இல்
மலாயாவைக் கைப்பற்றியது. ஜப்பான் ஆட்சியின்போது, இங்குள்ள தமிழர்கள்
பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை.
மலாயாவின் வரலாறெங்கும் தமிழர்களின் உயிரும் குருதியும் கொட்டிக்
கிடக்கின்றன. ரப்பர் உற்பத்தி முதற்கொண்டு இன்னபிற வேலைகள்
வரையிலாகத் தமிழர்களின் உழைப்பை கணக்கற்றுப் பிழியப்பட்டுள்ளது.
இந்நாட்டில் வந்திறங்கிய அனைத்துத் தமிழர்களின் அயராத உழைப்பே
இன்றைய மேன்மை பெற்ற மலேசியாவாகும். இன்று நாம், ஆதித் தமிழர்களின்
தொப்புள் கொடிகளாய் நீண்டு வளர்ந்திருக்கின்றோம். மே.3, 1939-இல்
சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
வெளியிடப்பட்டுள்ளது.
பாடம்
பதிவு எண் A61401
பிறப்புச் சான்றிதழ்
பெயர் : சுப்பிரமணியம்
பால் : ஆண்
தந்தை பெயர் : நாராயணசாமி
தொழில் : ரப்பர் மரம் சீவுதல்
நாட்டினம் : தமிழ்
தாய் : நாகம்மா
நாட்டினம் : தமிழ்
பிறந்த இடம்: நோவ்ஸ்கோடியா தோட்டம்
அறிவித்தவர் பெயர் : நாராயணசாமி
பதிவு செய்த நாள் நண்பகல் 12.05
மே.3, 1939
|