"ஆவணம்" ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்

 

முன்னோட்டத் தகவல் குடியுரிமைச் சான்றிதழ்...

 

விடுதலைக்கு முன்பு கைநாட்டுச் சான்றிதழின் பயன்பாடு பரவலாக இருந்தது. ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்குரிய முக்கியச் சான்றாக இது இருந்தது. இவ்வாறு கொடுக்கப்படும் குறிப்புகளின் நம்பகத்தன்மை பெரும்பாலும் ஏற்புடையனவாகவே இருந்தன. கொடுக்கப்பட்ட செய்திகளின் நம்பகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மக்கள் வாய்மொழியாகவும், கையெழுத்து வடிவமாகவும் கொடுக்கப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமைச் சான்றிதழ்கள் எல்லா வகையான அலுவல்களுக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. ஒருவர் தன்னைப்பற்றிக் கொடுத்த அடிப்படைத் தகவல்களை முன்னோட்டமாகக் கொண்டே குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை ஆங்கிலத்தில் Prima Facie System என்று அழைக்கின்றனர்.

Prima facie is a Latin expression – which originates from Middle English meaning “on its first appearance", or “by first instance".

கையெழுத்து வடிவிலும், வாய்மொழி வடிவிலும் மக்கள் கொடுத்த முன்னோட்டத் தகவல்களை அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. அரசு மக்கள்மேல் கொண்டிருந்த நம்பகத்தன்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. இத்தகையச் சூழலில், சுப்பையா த/பெ பெருமாள் (எம்) என்பவருக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் தொடர்பான குறிப்புகள்
பதிவு எண்: 334

முழுப்பெயர்/பால் : சுப்பையா த/பெ பெருமாள் (எம்)
 

முகவரி : தி.பி.ஜி. 1115, சாமி வீதி, போர்ட் வெட்டன்ஹெம்.
 

குடியுரிமைப் பதிவு எண் : எஸ் எல் 563777 கிள்ளான்

பிறந்த இடம்/நாள் : பிறை / 18 ஏப்ரல் 1919

இனம் : இந்தியன் (தமிழ்)

தகப்பனார் பெயர் : பெருமாள்

தாயார் பெயர் : பச்சையம்மாள்

 


முன்னோட்டத் தகவல் குடியுரிமைச் சான்றிதழ்

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com