"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
மலாயா
மக்களின் தீவிரவாத எதிர்ப்பு மாதம்
Anti-Bandit
month,' March 1950, the government produced 170,000 posters,
4,100,000
leaflets, 40,000 booklet and other materials.
1948-1960 வரையிலாக
மலாயா அரசு, அரசுக்கு மிரட்டலாக இருக்கும் இயக்கங்களையும்
தனிப்பட்டவர்களையும் ஒடுக்குவதில் அதிகக் கவனம் கொண்டிருந்தது.
அரசுக்கு எதிர்ப்பாகச் செயற்படும் இயக்கங்களைத் தீவிரவாத இயக்கம்
எனவும் தனிப்பட்டவர்களைத் தீவிரவாதிகள் எனவும் கருதியது.
அப்போது அரசுக்கு மிகப்பெரிய மிரட்டலாக இருந்தது கம்யூனிஸ்ட்
இயக்கமாகும். கம்யூனிஸ்டுகளைத் தீவிரவாதிகள் எனவும் வலியுறுத்தியது.
கம்யூனிஸ்ட் இயக்கவாதிகளின்பால் பொதுமக்கள் எதிர்ப்புணர்வினைக்
கொண்டிருக்க வேண்டும், எந்தவொரு காரணத்தை முன்னிட்டும் பொதுமக்கள்
கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளவோ கம்யூனிஸ்டுகளுக்கு உதவி
செய்திடவோ கூடாது என அரசு வேண்டிக் கொண்டது. கம்யூனிஸ்டுகளுக்குத்
தகவல் கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என அரசு
உத்தரவிட்டது.
கம்யூனிஸ்டு இயக்கத்தினைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்ததோடு அந்த
இயக்கத்தினை எதிர்த்து, தீவிரவாதிகளையும் தீவிரவாத இயக்கத்தினையும்
எதிர்க்கும் மாதம் (Anti Bandit Month) அறிமுகப்படுத்தியது. அதற்கு,
மலாயாவில் இயங்கும் தொழிற்சங்கங்களையும் தொழிற்சங்கவாதிகளையும்
ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டது. தீவிரவாதத்தை எதிர்க்கும் மாதம்
என்ற நடவடிக்கையினை ஆதரித்துப் பல இயக்கங்களின் முக்கியப்
பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டனர். அதில் ஒரு பகுதிக்கான குறிப்பு
இங்கே உள்ளது. இதில் 121 பல்வேறு இயக்கங்களிருந்து
பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களில் 42 பொறுப்பாளர்கள்
இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
