"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
கங்காணி உரிமம் –
“லைசன்ஸ்"
“வெள்ளையர்
நினைத்ததுபோல இந்தியாவிலிருந்து தொழிலாளரை அத்துணை எளிதில்
கொண்டுவர முடியவில்லை; என்றாலும், அங்கு நிலவிய வறுமையும்
நிலக்கிழார்களிடம் அகப்பட்டுத் துடித்த கொத்தடிமை நிலையும், பல்வேறு
சமுதாய நெருக்குதல்களும் இந்தியரைப் பிழைப்பு நாடிப் புலம்பெயரத்
தூண்டின. வெள்ளையர் முகவர் (Agent) காட்டிய கவர்ச்சிகளும் அவர்களைக்
கவர்ந்தன".
[மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், முரசு நெடுமாறன். பக்கம்
55-1997]
மலாயாவில் தொழில் செய்வதற்காகக் குடியேற்றப்பட்ட தமிழகத்
தொழிலாளர்கள் தாமே முன் வந்து இங்கு வரவில்லை என்பது அறிந்த
செய்தியே. அவர்களுக்கு ஏற்பட்ட வாழ்வியல் சிக்கல்களைத்
தீர்ப்பதற்கான வழியாக, மலாயாவில் தொழில் அமையுமென எண்ணினர்.
இவர்களைக் மலாயாவிற்குத் கொண்டு வருவதற்குக் கங்காணிகள்
பணிக்கமர்த்தப்பட்டனர். தமிழகத் தொழிலாளர்களை மலாயாவிற்குக் கொண்டு
வர கங்காணிகளும் பெரும் பங்கு வகித்துள்ளனர். கங்காணிகளின் “ஆசை
வார்த்தைகளை” நம்பி வந்த தொழிலாளர்கள் அதிகமானவர்களாவர். அவ்வாறு
வந்தவர்களின் மனக்குமுறல்களும் ஏக்கங்களும் உண்மைநிலை அறிந்த
பின்னால், பாடல்களின் வழியாகப் புறப்பட்டன:
“சீனிக்கு காக்காயோட்டக் – கூட்டிக்கினு வந்த
கறுப்புச் சட்டைக் கதிர்வேலு கங்காணி
................................................................
ஒரு தட்டு அப்பத்துக்கு ஒருதட்டு வெள்ளின்னு சொன்ன
கறுப்புச் சட்டைக் கதிர்வேலு கங்காணி
................................................................
வாழப்பழத்துக்குக் குரங்கோட்டக் கூட்டிக்கினு வந்த
கறுப்புச் சட்டைக் கதிர்வேலு கங்காணி”.
[மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியம், முரசு நெடுமாறன் - பக்கம்
335-1997]
“கங்கா ணின்னா கங்காணி கறுப்புச் சட்டைக் கங்காணி
சஞ்சியிலே கூட்டி வந்து சாக டிக்கும் கங்காணி
சீனிக்குக் காக்காய்ஓட்டிச் சீராக வாழலன்னு
சிரிக்கச் சிரிக்கப் பேசிச் சீரழிக்கும் கங்காணி
................................................................"
[மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், முரசு நெடுமாறன் - பக்கம்
335-1997]
இவ்வாறு ஆசை காட்டி தொழிலாளர்களை மலாயாவிற்கு அழைத்து வரும்
கங்காணிகளுக்குக் கங்காணி உரிமம் (லைசன்சு) கொடுக்கப்பட்டிருந்து.
கங்காணி உரிமம் கொடுக்கப்பட்டுள்ளவர்களே தொழிலாளர்களை அழைத்துவர
அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ஆங்கிலேயர்களின் முகவர்களாகவே
செயற்பட்டனர். கங்காணிகள் கொண்டு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும்
தலைக்குப் பத்து வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. [காண்க: தொழிலாளர்
உரிமம் கட்டுரை]
இங்கே கங்காணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த “கங்காணி உரிமம்" கொடுக்கப்பட்டுள்ளது.
GOVERNMENTS OF THE FEDERATED MALAY ESTATE
FORM OF STATUTORY DECLARATION.
I E. ______________________ kangani
Do solemnly and sincerely declare that I have __________
chinglepet, India 12th. January 18 ________.
__________________________________ and I make this solemn
declaration conscientiously believing the same to be true, and
by virtue of the provisions of the Statutory Declarations
Enactment, 1899.
Subscribed and solemnly declared
By the above - named E. Ka____________Kangani
At K. Lumpur in the state of Selangor this 24 day of
________________1933.
Before me
Magistrate.
