"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
தொழிலாளர் சேமநிதி
வாரியத்தில் தமிழ்
மலேசியாவின் தொழிலாளர்
சேமநிதி வாரியம் பழம்பெரும் கொண்ட ஓர் அமைப்பாகும். இந்நாட்டுத்
தொழிலாளர்களின் காவலனாகவும் முதுமைக்கால அரணாகவும் இவ்வாரியம்
செயற்படுகின்றது. தொடக்கக் காலத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர் களின்
பொருளியல் ஒதுக்கீட்டுக் களனாகaaaa மட்டுமே செயற்பட்டது. இப்போழ்து
இவ்வாரியத்தின் செயற்பாடுகள் பன்முனைக் கூறுகளில் விaaரிவாக்கப்
பட்டுள்ளது. வீடு வாங்குவதற்கு முன்பதிவு கட்டணம் ஏற்பாடு செய்வது
முதற்கொண்டு கல்விக் கடனுதவி, மருத்துவம் எனப் பல்நிலைகளில்
உதவிக்கரமாய் இருக்கின்றது.
இந்நாட்டில் தொழிற்புரியும் குடிமக்கள் யாவரும் தொழிலாளர் சேமநிதி
வாரியத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென்பது சட்டமாகும்.
இந்தியர், மலாய்க்காரர், சீனர் என எல்லாரும் இவ்வாரியத்தில்
உறுப்பினராக இருக்கின்றனர். தொடக்கத்தில், இவ்வாரியம் எல்லா
மொழிக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டது. காலப்போக்கில் இந்த
நற்கூறு சிதைந்து போய்விட்டது. தேசிய மொழிக்கு முன்னுரிமை
கொடுப்பதற்காகச் சிறுபான்மை மக்கள் மொழியைப் புறந்தள்ளி ஒதுக்குவது
அறமாகுமா?
1953-இல் தொழிலாளர் சேமநிதி வாரியம் வெளியிட்ட உறுப்பினர் சந்தா
அட்டையில் தமிழ்மொழி மிக நேர்த்தியாகச் கையாளப்பட்டுள்ளது. அரபு,
ஆங்கிலம், சீனம், தமிழ் என நான்கு மொழிகளில் குறிப்புகள்
காணப்படுகின்றன. இன்று அரபு மொழிக்குப் பதிலாக மலாய், ஆங்கிலம்,
சீனம், தமிழ் என பயன்படுத்தலாமே!
இது தொடர்பாக வினா எழுப்பினால், தேசியமொழa¢க்குத்தான் முன்னுரிமை,
எல்லாரும் தேசியமொழி அறிவர் என்பன போன்ற நொண்டிச்சாக்குகளை முன்
வைக்கின்றனர். மொழி என்பது உலகின் பொதுச் சொத்து. உலகில்
வழங்கப்படும் அத்துனை மொழிகளும் வாழ வேண்டும், வளர வேண்டும்
என்பதுதான் மாந்தனின் இயல்பான சிந்தனையாகும். தம் மொழி மட்டுமே வாழ
வேண்டுமென்ற சிந்தனை கொண்டிருப்பது ஒருவிதமான மனநோயாகும்.
குறிப்பிட்ட ஒரு நாட்டில் இத்தனை மொழிகள் வழங்கப்படுகின்றன, எல்லா
மொழிகளும் காக்கப்படுகின்றன, நாட்டு மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட
மொழிகளில் பயிற்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலைகளைக்
கொண்டிருந்தால், அந்நாட்டிற்கு பெருமை ஏற்படுமா? சிறுமை ஏற்படுமா?
பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் சிறுபான்மை
இனத்தாருக்குரிய உடைமைகளைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவது ஆளுமைப்
பெற்ற அரசுக்கு அழகல்ல...
