'தமிழர் பற்றாளர்' சிந்தனையாளர்
கணபதி கணேசன் அவர்கள்

சி்ந்தனையாளர்
கணபதி கணேசன் தமிழ் இதழியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். அவரின் இயற்பெயர்
கணபதி
கணேச லிங்கம்.
தமிழீழத்தின்
யாழ்ப்பாண திரு நெல்வெலியில்
03-03-1955இல் பிறந்தவர். தொடக்கக் கல்வி முதல் உயர்க்கல்வி வரை
யாழ்
இந்துக் கல்லூரியில்
பயின்றார்.
1970ஆம் ஆண்டிலிருந்து
கணபதி கணேசன்,
மதுரா என்ற புனைப் பெயர் களில்
ஈழநாடு, தினகரன், சிரித்திரன், செவ் வந்தி,
வீரகேசரி,
போன்ற இலங்கை இதழ் களுக்கும் மலேசியாவில் வாழ்ந்த காலத் தில்
இதயம்,
மலேசிய நண்பன், மக்க ளோசை போன்ற இதழ்களிலும் எழுதி வந்தார்.
1981ஆம் ஆண்டு
யாழ்ப்பாணத்தில்
வெளிவந்த 'மேகம்'
என்ற சிறு இதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்தார்.
தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில்
'மக்கள் பாதை மலர்கிறது', 'பொங்கும்
தமிழமுது' போன்ற இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார்.
1998 ஆம்
ஆண்டு மலேசியாவில் வெளிவரத் தொடங்கிய செம்பருத்தி மாத இதழின்
பொறுப்பாசிரியராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார். மலேசியத்
தமிழர்களின் வாழ்வியல் உரிமைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் ஆய்வுக்
கட்டுரைகள் எழுதினார்.
தம்முடன் பணியாற்றிய
தோழர்களுக்கு தந்தையாக, நண்பனாக, ஆசிரியராக, ஏடலராக
இருந்து வழி காட்டினார்.

மகள் மதுரா, மகன் யதுநந்தன்,
மனைவி கெளரியுடன் கணேசன்
அண்ணன்
அவர்
மூன்று கவிதை நூல்களை
வெளியிட்டுள்ளார்.
அவரின் இறுதி கவிதை நூல்
'குருதி பூத்த வெள்ளரசு'
உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் வெளியிடாக வெளி வந்துள்ளது.
தான் பணியாற்றிய இதழ்களில் பதிவு
செய்த அனைத்து நேர்காணல்களையும் தமிழக இதழ்களி்ல் எழுதிய
சிறுகதைகளையும் நூலாக்க வேண்டும் என அவ்வபோது சொல்வார். ஆனால் அவரின்
கனவு நினைவாக வில்லை. அதற்குள் மரணம் அவரை அணைத்துக் கொண்டது.
அவர்
13-11-2002இல் காலமானார்.
எழுது எழுது என எங்களை ஊக்கப்படுத்தியவர். இன்றும் நினைவுகளாய் இருந்து வழிகாட்டுகிறார்.
ஈழத் தமிழர், தமிழ் நாட்டுத் தமிழர்
என பாகுபாடு இல்லாமல் அனைத்து தமிழர்களையும் அவர் போற்றினார். அவர்களின் எழுச்சிக்காக தம் தூவலை ஆயுதமாக்கினார்.
தமிழகத்தையும் தம் தாயகமாகவே
கருதினார்.
அவரின் உயிர்
தமிழகத்திலேயே பிரிந்தது. யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டார்.
புரட்சியாளர்கள் புதைப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்.
அவரின் பணிகளை
மொழி நெட் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.

ஈழப்
போர்
தமிழனையெல்லாம் மனிதன் ஆக்கியது
கணேசனின் கவிதைகள்
ஒவ்வொரு மனிதருள்ளும் தமிழனை உருவாக்கும்
மருத்துவர் மா.
சண்முகசிவா (மலேசியா)
கணபதி
கணேசனின் எழுதுகோல்-
கால்
ஒடிந்து நடைதளர்ந்த தமிழினம்
கைபற்றி நிமிரும் ஊன்றுகோல்
உணர்ச்சிப்
பாவலர் காசி ஆனந்தன் - (தமிழீழம்)
கதவைக்
கண்டு்பிடிக்க முடியாத சுவராய் மிரட்டி.... கதவே இல்லாத வெளியாய்
உள்வாங்கி வெளியேற அனுமதிக்காத கண்ணாடிச்சுவராய் மாறிக் கொள்ளும்
தூய அன்புக்குரியவர் நீஙகள.
பாவலர் அறிவுமதி - (தமிழ்நாடு)
சிந்தனையாளர் கணபதி கணேசன்
அரும் பணி நினைவு நாள் 2004
(ஒளிப்படங்கள்)
1981இல் வெளிவந்த
சிந்தனையாளர் கணபதி கணேசனின் "மேகம்" சிற்றிதழ்
மலேசிய
நண்பனில் வெளிவந்த இரங்கல் செய்தி
பாவலர்
அறிவுமதியின் கவிதை - மண் இதழ்