மலேசியத் தமிழ்த் rதலைவர்கள், அறிஞர்களின் மெய்மொழிகள்

தந்தைச்சொல்

  1. வரலாற்றை பயிலாதவர்களும் வரலாற்றை பாதுகாக்காதவர்களும் தங்கள் இன அடையாளத்தையும் முகவரியையும் அழித்துக் கொள்பவர்கள்.  - ஆய்வாளர் மு. வரதராசு

  2. முதலாம் நூற்றாண்டிலேயே மலேசிய மண்ணில் கால் பதித்த நம் தமிழர்கள்,  21ஆம் நூற்றாண்டிலும் நாட்டின் வளர்ச்சிக்கு நிலைத்தன்மைக்கும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.  எனவே எளிதில் யாரும் மலேசியத் தமிழர்களின் அடிச்சுவடுகளையும் வரலாறுகளையும் மறந்துவிடவும் முடியாது. மறைத்துவிடவும் முடியாது - ஆய்வாளர் மா.ஜானகிராமன்

  3. மண்ணின் மைந்தர்கள் என்றும் அல்லாதவர்கள் என்றும் மலேசிய மக்களை பிரித்து வைத்தால் தேசிய ஒருமைப்பாட்டை எவ்வாறு அடைய முடியும்? பூமிபுத்ராக்கள் என்றால் யார்? மலேசிய மண்ணில் பிறந்தவர்கள் எல்லாரும் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதே என் அசைக்க முடியாத கருத்து. - மாமனிதர் வி. டேவிட் ஐயா

  4. தூசு படிந்து அழுக்கேறிவிட்ட கண்ணாடியை தூய்மை செய்வதே மெய்யான சீர்திருத்தமாக இருக்க முடியும்.  அதனை விடுத்து ஆராயாமல்,  பயன்படாத பழமையானது என தூக்கி எறிவதுதான் சீர்திருத்தம் என்று சிலர் தவறாக எண்ணி விடுகின்றனர். பாவலர் அபு. திருமாலனார்

  5. ம்முடைய இன்றைய தற்காலிக வளத்தை மட்டும் கண்டு ஏதோ ஒரு வகை போதையில் நாம் இருந்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் எதிர்காலத்தைப் பற்றியும் நம்முடைய அடுத்தடுத்த தலைமுறைகளைப் பற்றியும் மலேசியத் தமிழ்ச் சமூகம் சிந்திக்க முடியவி்ல்லை. கடாரத் தமிழ்ப் பேரறிஞர் மருத்தவர் சி. ஜெயபாரதி

  6. தனக்காகப் படிப்பவன் தன் அறியாமையை கண்டுணர்வான். அறிவாளி ஆவான். பிறருக்குச் சொல்லிப் புகழ்தேட படிப்பவன் மெல்ல மெல்ல அறிவிலியாகி, அறிஞர் நடுவே இழி வெய்துவான். - பாவலர் அ.பு. திருமாலனார்

  7. தமிழரின் வீழ்ச்சிக்கு காரணம் மெத்தப் படித்தவர்கள்தான். அவர்களால்தான் தமிழர்களின் மொழி, இன நாட்டுணர்வு மழுங்கடிக்கப்பட்டது. ஆட்சிப் பசியும் - அதன் வழி பெறும் ஈட்டத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுவதும் அதற்கேற்றார்போல் மக்களைத் திசைதிருப்புவதும் இவர்கள்தாம்.  உண்மையான எழுச்சியும், உழைப்பும் போராட்டக் குணமும் அழுத்தப்பட்ட மக்களின்று வெளிப்படுபவர்களுக்கு மட்டுமே உண்டு. - சித்தர் பழவீரர்

  8. நமது சமுதாயத்தைப் பொறுத்த வரையில் வரலாற்றைப் படித்துத் தெரிந்துக் கொள்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை. பல இன மக்கள் வாழும் மலேசியாவில் நமக்கும் நமது தலைமுறைக்கும் ஒளிமயமானதாக இருக்காது என்பது திண்ணம். நம் உரிமைகள் பறிக்கப்படும்பேர்த அதனை எதிர்த்து போராட முன் வர வேண்டும். - ஆய்வாளர் மு. வரதராசு

  9. பண்படாத எவரும் புண்படவே செய்வர். நாம் கொண்ட இலக்கில் தெளிவு வேண்டும். இலக்கு தவறினால் யார் யாரோ நம்மை வழிநடத்தும் நிலைக்க நாம் ஆளாகி விடுவோம். - சித்தர் பழவீரர்

     

 

 

 

 

 

 

 

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com

இவ்வகப்பக்கத்தின் தகவல் பயனீட்டின் வழி ஏற்படும் எவ்வித இழப்பிற்கும் பாதிப்பிற்கும் மொழி நெட் பொறுப்பேற்காது